
கெலாங் பாத்தா, பிப்ரவரி-18 – ஜோகூர், கெலாங் பாத்தா, Forest City-யில் அமைந்துள்ள Invest Malaysia Facilitation Centre-Johor (IMFC-J) நடவடிக்கை அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வ திறப்பு விழா கண்டது.
மேன்மைத் தங்கிய ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்தோத்தா இஸ்மாயில் அவர்கள் சிறப்பு வருகைப் புரிந்து அதனைத் திறந்து வைத்தார்.
IMFCJ ஒரு வியூக மையமாகச் செயல்பட்டு முதலீடுகளை எளிதாக்கி, ஒப்புதல் செயல்முறைகளை விரைவுபடுத்தும்; தவிர, உயர்தர முதலீடுகளை ஜோகூருக்கு ஈர்க்க ஏதுவாக பங்குதாரர்களுக்கு ஒரு பாலமாகவும் அது செயல்படவிருக்கிறது.
இம்மையம், வட்டார பொருளாதார வளர்ச்சிக்கான உந்துச் சக்தியாக, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தை (JS-SEZ) வலுப்படுத்துவதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும்.
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி, மாநில அரசின் செயலாளர் தான் ஸ்ரீ Dr ஹஜி அஸ்மி ரொஹானி, முதலீடு-வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் செனட்டர் தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் உள்ளிட்டோரும் அத்திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
இதனிடையே, மலேசியக் கால்பந்து சங்கம் FAM-மின் புதிய நிர்வாகத்தினருடனான மதிய உணவு விருந்திலும், துங்கு மக்தோத்தா கலந்துகொண்டார்.
FAM முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ ஹஜி ஹமிடின் ஹஜி மொஹமட் அமினும் அதில் பங்கேற்றார்.
FAM நிர்வாகப் பதவிகளுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.