
கோத்தா கினாபாலு, நவம்பர் 11 – மலேசிய வானிலை துறை (MetMalaysia) இன்று காலை 8 மணியளவில், ‘Fung-Wong’ அதாவது தீவிர சூறாவளி புயல் கண்டறியப்பட்டுள்ளதாக, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்புயல் வடக்கில் 19.8 அகலம், கிழக்கில் 117.9 நீளம் என்ற அளவிடத்தில், ஃபிலிப்பைன்ஸிலுள்ள லாவாக் நகருக்கு வடமேற்கு திசையில் 335 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயல் வடமேற்கை நோக்கி மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது என்றும் அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 111 கிலோ மீட்டர் எனவும் கூறப்பட்டது.
தற்போது புயல் சபா மாநில Kudat நகரிலிருந்து 1,439 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் வானிலை துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் ஃபிலிப்பைன்ஸில் புயல் தாக்கிய போது, 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்க்கப்பட்டனர் எனவும் அறியப்பட்டது.



