Latestமலேசியா

’Gang Pacific Siva’ கும்பலைச் சேர்ந்த 16 பேர் மீது SOSMA சட்டத்தின் கீழ் பினாங்கில் குற்றச்சாட்டு

பட்டவொர்த், டிசம்பர்-23 – கடந்த எட்டாண்டுகளாக ‘Geng Pasific Siva’ என்ற பெயரில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த 16 ஆடவர்கள், இன்று பினாங்கு பட்டவொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

SOSMA எனப்படும்  2012 பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

2016 ஜுன் முதல் இவ்வாண்டு நவம்பர் 26 வரை அக்குற்றங்களில் ஈடுபட்டதாக, அவர்களில் 23 முதல் 44 வயது வயதிலான 14 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

32 முதல் 44 வயதிலான மேலுமிருவர், 2019 முதல் 2024 நவம்பர் 26 வரை அக்குற்றங்களைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

தமிழில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட, புரிந்துகொண்டது போல் அவர்கள் தலையாட்டினர்.

SOSMA சட்டம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், அவர்களிடம் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

16 பேரில் எவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.

வழக்கு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி செவிமெடுப்புக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!