
ஷா ஆலாம், ஜனவரி-13-இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Glamping with Pride’ நிகழ்ச்சிக்கு, சிலாங்கூர் அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அதிகாரிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, இயற்கைக்கு மாறான LGBT கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக பொது மக்கள் மத்தியில் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து அவர் அவ்வாறு விளக்கினார்.
சிலாங்கூர் அரசு இத்தகைய நிகழ்ச்சிகளை ஆதரிக்காது எனவும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
ஜனவரி 17, 18-ஆம் தேதிகளில் உலு லங் காட்டில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் அந்நிகழ்வை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு முன்னதாக சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட் ரிஸ் ஷாவும் ஆணையிட்டிருந்தார்.
இந்நிகழ்வு குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது



