Latestமலேசியா

‘Good Morning Sayang’ குறுஞ்செய்திக்கு ஏன் பதில் வரவில்லை? காதலனை நச்சரித்தப் பெண்ணுக்கு கன்னத்தில் பளார் அறை; ஆடவருக்கு ஜோகூரில் RM800 அபராதம்

பத்து பஹாட், அக்டோபர்-17 – ‘Good Morning Sayang’ என WhatsApp-பில் அனுப்பிய செய்திக்கு பதில் வராததால் ஏற்பட்ட சண்டையில் , காதலியின் கன்னத்தில் அறைந்த ஆடவருக்கு ஜோகூரில் 800 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 10-ஆம் தேதி அக்குற்றத்தைப் புரிந்ததை, 20 வயது Muhamad Nurhaqimi Harun பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆடவரின் வேலையிடத்திற்கு மதிய உணவை கொடுத்து விட்டுப் போக வந்த காதலி, காலையில் தான் அனுப்பிய good morning செய்திக்கு ஏன் பதில் அனுப்பவில்லை என கேட்டு சண்டையிட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில், காதலன் சினத்தில் அப்பெண்ணின் கன்னத்தில் அறைந்து விட்டார்; அதில் அப்பெண்ணுக்கு சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அப்பெண், பத்து பஹாட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

800 ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தவில்லையென்றால் 14 நாட்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் நீதிபதி அவ்வாடவரை உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!