
குவா மூசாங், கிளாந்தான், டிசம்பர் 3 – கிளாந்தான் Gua Musang–Lojing பாதையின் 45 வது கிலோமீட்டரில், Pos Blau அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அச்சாலை இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
JKR அதாவது பொது பணித்துறை வெளியிட்ட அறிக்கையில், பாதை மீண்டும் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகள் மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். Gua Musang இலிருந்து Cameron Highlands-ஐ நோக்கிச் செல்பவர்கள் Sungai Koyan வழியாக Ringlet–Cameron Highlands பாதையைப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஈப்போ நோக்கிச் செல்லும் பயணிகள் Gua Musang, Sungai Koyan, Ringlet, Tapah மற்றும் ஈப்போ பாதையைப் பயன்படுத்தலாம் என்று JKR அறிவித்துள்ளது.



