
Gunung Lambak மலையில் மயங்கி விழுந்து 54 வயது ஆடவர் மரணம்
குளுவாங், பிப்ரவரி-24,
ஜோகூர், குளுவாங்கில் உள்ள Gunung Lambak மலையில் ஏறும் போது 54 வயது ஆடவர் லோ யியோங் கியோங் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
அவர் தனது மைத்துனியுடன் காலை 11 மணிக்கு மலையேறத் தொடங்கினார்.
மதியம் 12 மணியளவில், சுமார் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து போலீஸார் இச்சம்பவத்தை ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தியுள்ளனர்.
மரணமடைந்தவரின் உடல், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, இன்று காலை சவப்பரிசோதனை நடைபெறுகிறது.



