
சைபர்ஜெயா, நவம்பர்-5 – மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியமான HASiL, தனது ‘2025 புத்தாக்க மற்றும் நெறிமுறை’ தினத்தை (HII 2025) சைபர்ஜெயா, மெனாரா HASiL-லில் சிறப்பாகக் கொண்டாடியது.
நிதி துணை அமைச்சர், Lim Hui Ying தலைமையில் நடைபெற்ற இவ்விழா, புத்தாக்கம் மற்றும் நெறிமுறைக் கூறுகளுடன் நிறுவனத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது.

துணை அமைச்சர் தமதுரையில், HASiL அமைப்பு டிஜிட்டல் உருமாற்றத்தில் முன்னோடி எனப் பாராட்டினார்.
2026-ஆம் ஆண்டில் முழுமையாக அமல்படுத்தப்படவுள்ள e-Invois மற்றும் தானியங்கி முத்திரை மதிப்பீட்டு முறை ஆகியவை அரசாங்க நிதி நிர்வாக திறனை வலுப்படுத்தும் முயற்சிகளுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், நிகழ்வின் முக்கிய அம்சமாக, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைத் துறைகளை உள்ளடக்கிய 10 புதிய தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இது, HASiL அமைப்பு தொடர்ந்து புத்தாக்கம் மற்றும் நெறிமுறையை மையப்படுத்திய சிறந்த வரித்துறை நிறுவனமாக வளர்ந்து வருவதை பிரதிபலிக்கிறது.



