
அலோர் ஸ்தார், டிசம்பர் 1 – அண்மையில் தாய்லாந்தின் Hat Yai பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 1,200 முதல் 1,500 மலேசிய வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதில் சில வாகனங்கள் ஹோட்டல்களின் தரைமட்டத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கின.
பாதிக்கப்பட்ட வாகனங்களைத் தாய்லாந்து லாரிகளின் மூலம் மலேசிய எல்லைக்குக் கொண்டு சென்ற பின்னர் மலேசிய லாரிகள் மூலம் அவைகளை மீட்டெடுத்துள்ளனர்.இந்நிலையில் முற்றிலும் சேதமடைந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் அங்கேயே விட்டு விட்டு சென்றனர்.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட 23 மலேசிய தன்னார்வ தீயணைப்பு அணிகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.



