
லண்டன், பிப் 17 – இங்கிலாந்திலுள்ள விமான நிலையம் ஒன்றில் ஒரு பேக்கில் 400,000 பவுன் அல்லது 2.2 மில்லியன் ரிங்கிட் மறைத்து வைத்திருந்த ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
புதன்கிழமையன்று Heathrow விமான நிலையத்திலிருந்து துருக்கிக்கான விமானத்தில் ஏறமுயன்றபோது 41 வயதுடைய
Broomand Nasab என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டதாக Metro Uk பத்திரிகை தகவல் வெளியிட்டது.
அந்த நபர் வைத்திருந்த கைப் பையிலிருந்தும் 11,000 பவுன் ( 51,147 ரிங்கிட் ) போலீஸ் கண்டுபிடித்தனர்.
ஆஸ்திரிய (Austria) பிரஜையான அந்த சந்தேகப் பேர்வழி சட்டவிரோத பணம் பரிமாற்றத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டான்.
அவனிடமிருந்து அனைத்து பண நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமையன்று Uxbridge மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் Nasab மீது குற்றஞ்சாட்டப்பட்டது.