Latestமலேசியா

‘Hulu Langat’ பகுதியில் வெள்ளம்; 20 பேர் காப்பாற்றப்பட்டனர்

ஹுலு லங்காட், டிசம்பர் 4 – சிலாங்கூர் ஹுலு லங்காட் Kampung Dusun Nanding பகுதியில் இன்று காலை ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 20 பேர், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரால் (JBPM) பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று உடனடியாக மீட்பு பணி வேலைகளில் ஈடுபட்டனர் என்று சிலாங்கூர் துணை இயக்குநர், Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

வெள்ளநீர் 1 அடி ஆழத்தில் இருந்தபோது, மீட்பு பணியாளர்கள் அங்கிருந்த 20 பேரையும் பாதுகாப்பான இடத்திற்கு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தற்போது, அப்பகுதியின் நிலை பராமரிக்கப்பட்டு, வெள்ளநீர் அளவும் குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹுலு லங்காட் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு தற்காலிக இடமாற்ற மையங்கள் (PPS) அமைக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!