Latestமலேசியா

பட்டாசு வெடித்துக் கொண்டே RXZ மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆடவனை போலீசார் அடையாளம் கண்டனர்.

சிகமாட், மார்ச் 24-பட்டாசுகளை வெடித்தபடி ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் நபரின் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அந்நபரை போலீஸ் தீவிரமாக தேடிவருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 10.30 க்கு , ஜாலான் ஜோகூர் பாரு-செரம்பான் சாலையின் 185வது கிலோமீட்டரில், யமஹா RXZ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததாக செகமாட் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் Superintendan எம் . நந்தா கூறினார்.

இது தொடர்பாக, ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், 07-9325811 என்ற எண்ணில் செகாமட் போலீஸ் தலைமையகத்தை தொடர்பு கொண்டு தகவல் தருவதற்கு உதவ முன்வருமாறு இன்று வெளியிட்ட அறிக்கையில் நந்தா கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவத்தை போலீஸ் கடுமையாக கருதுவதோடு விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபரை தீவிரமாக தேடிவருவதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!