
வாஷிங்டன், செப்டம்பர்-22,
உலகம் முழுவதும் பிரபலமான உண்ணா நோன்பு முறைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் விரதமிருக்கும் Intermittent Fasting முக்கியமானதாகும்.
தினமும் 8 மணி நேரத்திற்குள் மட்டுமே உணவு உட்கொண்டு, மீதமுள்ள நேரத்தில் நோன்பு இருக்கும் அம்முறையே ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று இதுநாள் வரை கருதப்பட்டு வருகிறது.
ஆனால், அமெரிக்காவில் 19,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சித் தரும் புதிய ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அதாவது, தினமும் 8 மணி நேரத்திற்குள் மட்டுமே உணவருந்தியவர்கள், 12 முதல் 14 மணி நேரம் வரை உணவு எடுத்தவர்களை விட 135% அதிகமாக இதய நோய் காரணமான மரண ஆபத்துக்கு உள்ளானார்கள்.
மொத்த மரண விகிதத்தில் பெரிய மாற்றமில்லை என்றாலும், இதய நோய் ஆபத்து அனைத்து வயது, பாலினம், வாழ்க்கைமுறை பிரிவுகளிலும் தொடர்ந்து அதிகமாக இருந்தது.
இந்த ஆய்வு, அதற்கான காரணத்தையோ விளைவுகளையோ உறுதிச் செய்யவில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இம்முடிவு intermittent fasting முற்றிலும் ஆபத்தற்றது என்ற பரவலாக நம்பிக்கைக் குறித்து கேள்வி எழுப்புகிறது.
இதையடுத்து, குறிப்பாக புகையிலை பிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.