
கோலாலம்பூர், மார்ச்-3-தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான Apple Inc. அதன் புதிய iPhone 17e மாடல் கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதியக் கைப்பேசியின் ஆரம்ப விலை 599 அமெரிக்க டாலராகும்.
iPhone 17e, இவ்வாண்டுக்கான Apple வரிசையில் மலிவு விலையில் வழங்கப்படும் ஒரு முக்கிய மாடலாகும்.
இது புதிய A19 சில்லுகளைக் கொண்டு இயங்குகிறது.
இதனால் வேகமான செயல்திறனும் சிறந்த மின்சார சேமிப்பும் கிடைக்கும்.
இந்த கைப்பேசி, 6.1 அங்குல Super Retina XDR திரை மற்றும் 48 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது.
தவிர, MagSafe சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
முன்பதிவு இந்த வாரமே தொடங்குகிறது.
உலகின் முக்கிய சந்தைகளில் இது விரைவிலேயே விற்பனைக்கு வரும்.
மலிவு விலையில் மேம்பட்ட அம்சங்களுடன் வந்துள்ள இந்த iPhone 17e, சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.



