
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-16, Chicken ham and cheese சன்விட்ச் ரொட்டிகளில் பயன்படுத்தப்படும் இறைச்சிகளுக்கு ஹலால் சான்றிதழ் இருப்பதால் மட்டுமே, மொத்த சன்விட்ச் ரொட்டியும் ஹலால் ஆகிவிடாது.
மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளது.
ஹலால் அங்கீகாரம் என்பது, ஒட்டுமொத்தமாக கையாளும் முறை, உற்பத்தி, தயாரிப்பு ஆகியவற்றை உட்படுத்தியிருப்பதாக அது விளக்கியது.
மலேசிய ஹலால் சான்றிதல் தர நிர்ணயத்திற்கு ஏற்ப மேற்கண்ட அம்சங்களைப் பூர்த்திச் செய்த உணவுப் பொருட்களுக்கே ஹலால் அங்கீகாரம் வழங்கப்படும்.
மலாயாப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் KK Mart கடைகளில் விற்கப்பட்ட chicken ham and cheese சன்விட்ச் ரொட்டிகளில் ஹலால் முத்திரை ஒட்டப்பட்டிருந்த சர்ச்சை குறித்து JAKIM கருத்துரைத்தது.
KK Mart-டுக்கு அந்த சன்விட்ச் ரொட்டிகளைத் தருவித்த நிறுவனமான Shake and Bake Café Sdn Bhd, அதில் பயன்படுத்தும் இறைச்சித் துண்டுகளுக்கு JAKIM ஹலால் அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக முன்னதாகக் கூறியிருந்தது.
எனினும், சர்ச்சைக்குள்ளான சன்விட்ச் ரொட்டிகளுக்கோ அல்லது அதன் தயாரிப்பு நிறுவனத்துக்கோ ஹலால் அங்கீகாரம் இல்லையென, JAKIM ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செயல்பாட்டை நிறுத்தி விட்ட வேறொரு நிறுவனத்தின் ஹலால் முத்திரையை அந்நிறுவனம் பயன்படுத்தி வந்துள்ளது, KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம் வாழ்க்கைச் செலவின அமைச்சு நடத்திய சோதனையில் தெரிய வந்ததும் நினைவிருக்கலாம்.