
கோத்தா பாரு, ஜனவரி-3 – கிளந்தான் மாநில போலீஸ் துப்பாக்கி பயிற்சி மையத்தின் சுவரில் “Jangan lari Datuk Kopi” என்ற வாசகம் சிவப்பு சாயத்தால் எழுதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் யூசோஃப் மாமாட் மீதான நேரடி மிரட்டலாக இது
பார்க்கப்படுகிறது.
இதனை, குற்றச்செயல் கும்பல்கள் திட்டமிட்டு செய்திருப்பதாக
போலீஸ் நம்புகிறது.
கிளந்தானில் அத்தகைய கும்பல்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால், தம்மை அச்சுறுத்தும் முயற்சிகள் வலுவாக நடக்கின்றன… எனினும் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தாம் அடிபணியப் போவதில்லை என யூசோஃப் மாமாட் திட்டவட்டமாகக் கூறினார்.
மாநிலத்தில் குற்றச்செயல்களுக்கு எதிரான வேட்டைத் தொடருமென்றார் அவர்.
இந்நிலையில், சுவரில் கிறுக்கி மிரட்டியுள்ள கும்பலை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடைபெறுகிறது.
தகவல் தெரிந்த பொது மக்களும், போலீஸுக்கு உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



