
ஜோகூர், டிசம்பர் 11 – வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவிருக்கும்
FA அதாவது மலேசிய காற்பந்து சங்கத்தின் இறுதிப்போட்டியில் ஜோகூர் மாநில காற்பந்து அணி வெற்றி பெற்றால், மறுநாள் டிசம்பர் 15 ஆம் தேதி ஜோகூர் மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படுமென்று துங்கு மக்கோத்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அவர், காற்பந்து போட்டியில் வென்றால் நிச்சயமாக விடுமுறை தரப்படும் எனவும் தோற்றால் விடுமுறை இல்லை எனவும் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டது வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
ஞாயிறன்று நடைபெறவிருக்கின்ற இறுதிச்சுற்றில் ஜோகூர் அணி சபா அணியுடன் போட்டியிடவுள்ளது. கடந்த நான்காண்டுகளைப் போலவே இவ்வாண்டும் ஜோகூர் அணி FA கோப்பையைத் தட்டி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முதன்முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதியான சபா அணி, அரையிறுதியில் சிலாங்கூரை 5-4 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் போட்டியில் யார் வெற்றி கோப்பையை தட்டி செல்வார்கள் என்பது ஒருபுறமிருக்க, வருகின்ற திங்கட்கிழமை விடுமுறை கிடைக்குமா கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பிலும் ஜோகூர் மக்கள் காத்திருக்கின்றனர்.



