Latestமலேசியா

2025-ல் திறன் மேம்பாட்டுக்காக HRD Corp RM2.62 பில்லியன் நிதி ஒப்புதல்

புத்ராஜெயா, ஜனவரி-14-மனிதவள அமைச்சான KESUMA-வின் கீழ் இயங்கி வரும் HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டு கழகத்திற்கு, முடிந்த 2025-ஆம் ஆண்டு திறன் மேம்பாட்டில் சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக மட்டுமே 2025-ல் HRD Corp RM2.62 பில்லியன் நிதி உதவியை அங்கீகரித்துள்ளது.

இது 2024-ஐ விட 32 விழுக்காடு அதிகமாகும்.

HRD Corp நிர்வகிக்கும் திட்டங்களில் 2.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பயிற்சி இடங்கள் பதிவுச் செய்யப்பட்டன.

துறை வாரியாகப் பார்த்தால், உற்பத்தித் துறை 795,000 பயிற்சி இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது.

அதே சமயம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறையான ICT-யில் RM130 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு IR4.0 முயற்சிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

தவிர, மலேசிய இந்திய திறன் தேர்ச்சித் திட்டமான MISI-யின் கீழ் மொத்தம் 1,108 பேர் பயிற்சிப் பெற்றனர்; இது இந்திய சமூகத்திற்கான வேலைவாய்ப்பு பாதைகள் மற்றும் திறன் வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது.

HRD Corp-பின் நீடித்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் கூடுதலாக 442 பேர் பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளப்படவிருக்கின்றனர்.

அதோடு, PATH போன்ற உள்ளடக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆயிரக்கணக்கான மலேசியர்களுக்கும் பயனளித்துள்ளனர்.

2025-ல் தேசிய பயிற்சி வாரம் மற்றும் ஆசியான் திறன் ஆண்டு போன்ற முன்னெடுப்புகளும், HRD Corp-பின் அடையாளமாகத் திகழ்ந்தன.

HRD Corp, மனித மூலதன மேம்பாட்டில் இவ்வட்டாரத்தில் மலேசியாவை முன்னணியில் நிறுத்தி, வேலைவாய்ப்பு தயார்நிலை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!