Latestமலேசியா

வெறும் 1 ரிங்கிட்டுக்கு டுரியான்; 5 நிமிடங்களில் 3,000 கிலோ விற்றுத் தீர்ந்தன

குவாலா நெரூஸ், ஜூன்-28-நாட்டில் ஏற்பட்டுள்ள டுரியான் பழங்களின் அமோக விளைச்சல் காரணமாக அதன் விலை அதிரடியாகக் குறைந்துள்ள நிலையில், கெடாவில் வெறும் 5 நிமிடங்களில் ஆயிரக்கணக்கான கிலோ டுரியான் பழங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.

​கம்போங் புக்கிட் துங்கால் கிராமத்தில் உள்ள Kedai Durian Maiz என்ற கடையில், ஒரு பழம் வெறும் ஒரு ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டதால், அதைப் வாங்க பொது மக்கள் காலை 8 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

​வியாபாரத்தைத் தொடங்கிய வெறும் ஐந்து நிமிடங்களில், சுமார் 3,000 கிலோ கிராம் டுரியான் பழங்கள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன.

​குறைந்த வருமானம் பெறும் எளிய குடும்பங்களும் டுரியான் பழங்களை மனநிறைவோடு சுவைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மலிவு விலை விற்பனையைத் தொடங்கியதாக 27 வயது கடை உரிமையாளர் Izhar Ibrahim தெரிவித்தார்.

சிறிய அளவிலான இந்த பழங்கள் நல்ல தரத்துடன் இருப்பதாகவும், IOI, Udang Merah, D24 மற்றும் Grade A Musang King போன்ற புகழ்பெற்ற இரகங்கள் வெறும் 10 ரிங்கிட்டுக்கு விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

​பஹாங், ஜோகூர் மற்றும் பேராக்கில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத விளைச்சலே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகும்.

​இந்த பருவகாலத்தில் வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளதால், பொது மக்கள் அனைவரும் வரும் வாரங்களிலும் மலிவான விலையில் டுரியான் பழங்களை தாராளமாக எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!