
கோலாலம்பூர், ஆகஸ்ட்.13- Persatuan Ajaran Bhagavan Sri Ramana Maharshiயும் Sugam Karnaticaவும் இணைந்து ஜீவன் முக்தா (Jivanmukta) (முதல் பாகம்) எனும் சிறப்பு மேடை நாடக இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் போதனைகள் மற்றும் ஆன்மீகம் குறித்த உண்மையான விழிப்புணர்வையும் உள் எழுச்சியையும் உருவாக்கும் அவரது போதனைகள் இக்காலகட்டத்திற்கு எவ்வாறு முக்கியமானவை என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி இவ்வாண்டு இரண்டாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 22 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் கோலாலம்பூர், Brickfieldsசில் உள்ள Temple Of Fine Arts அரங்கில் நடைபெறுகிறது. மேடை நாடக இசை நிகழ்ச்சி பகவான் ஶ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேடை நாடகமும் Sugam Karnaticaவின் இசையும் பார்வையாளர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அழைப்பிதழ் அட்டை 100 ரிங்கிட்டாகும். அழைப்பிதழைப் பெற திரையில் காணும் எண்ணிற்கு WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் திரட்டப்படும் நிதி, பெட்டாலிங் ஜெயா, Section 12டில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிக்கான நிரந்தரமான போதனை மற்றும் சத்சங்க மையத்தை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும். நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று நேரடியாகச் சென்றும் பதிவு செய்யும் இடத்தில் விருப்பத்திற்கேற்ப நன்கொடை அளிக்கலாம்.



