Latestஉலகம்

செயுட்டா எல்லையில் வரலாறு காணாத நெருக்கடி; மொராக்கோவிலிருந்து 60,000 பேர் சட்டவிரோத நுழைவு, 57 பேர் பலி

மெட்ரிட், ஆகஸ்ட்-1-ஸ்பெயின் நாட்டின் வட ஆப்பிரிக்க எல்லையான ‘செயுட்டா’ (Ceuta) பகுதியில், வரலாறு காணாத எல்லைக் கட்டுப்பாடு மீறல் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அண்டை நாடான மொராக்கோவிலிருந்து ஒரே நாளில் சுமார் 60,000 அகதிகள் மற்றும் குடியேறிகள் எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி செயுட்டா பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.

கடுமையான கடல் அலைகளில் மூழ்கியும், கரையை அடையும் அவசரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டும் இதுவரை குறைந்தது 57 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை கைமீறிச் சென்றதையடுத்து, ஸ்பெயின் அரசு ட்ரோன்கள், போர்க் கப்பல்கள் மற்றும் மேலதிகப் படைகளைக் குவித்து எல்லையைத் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, சுமார் 48,000 தாங்களாகவே முன்வந்து மொரோக்கோ திரும்பியுள்ளனர்.

_”இது ஸ்பெயினின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்”_ என பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த எல்லை அத்துமீறல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்த ஸ்பெயினுக்கு முழு ஆதரவு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!