Latestமலேசியா

ஜனா விபாவா வழக்கு: RM200 மில்லியன் தொடர்பான 4 குற்றச்சாட்டுகளில் இருந்து முஹிடின் விடுவிப்பு

கோலாலம்பூர், செப்-15-முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, Jana Wibawa திட்டம் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளில் நான்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 200 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்ட ஒரு குற்றச்சாட்டு மற்றும் அதே தொகை தொடர்பான மூன்று பணமோசடிக் குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

அரசுத் தரப்பு வழக்கை வாபஸ் பெறக் கோரியதைத் தொடர்ந்து, துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் Datuk Ahmad Akram Gharib சமர்ப்பித்த மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி Noor Ruwena Md Nurdin ஏற்றுக் கொண்டார். அதனை அடுத்து, Muhyiddin அந்த நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

அவற்றில் மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகள், Bukhary Equity நிறுவனத்திடமிருந்து Muhyiddin 200 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக கூறப்பட்டவை ஆகும். மற்றொன்று அந்த நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் ரிங்கிட் தொகையைப் பெற்றுக் கொள்ள அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டாகும்.

எனினும், Jana Wibawa தொடர்பாக மூன்று நிறுவனங்களிடமிருந்து பெர்சத்து கட்சிக்காக 25.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாகக் கூறப்படும் மேலும் மூன்று குற்றச்சாட்டுகளை Muhyiddin தொடர்ந்து எதிர்கொள்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!