Latestமலேசியா

கிறிஸ்தவ மதத்தை அவமதித்ததாக சர்ச்சை; அம்னோவின் நூராஸ்லி சையிட் மீது போலீஸ் நடவடிக்கை தேவை – RSN ராயர்

கோலாலம்பூர், செப்டம்பர்-16,அம்னோ பொதுக் கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் அம்னோ பிரதிநிதி Noorazli Said மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர் வலியுறுத்தியுள்ளார்.

குற்றவியல் சட்டப் பிரிவு 298 மற்றும் 298A-வின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், வெறும் மன்னிப்பு மட்டும் போதுமானது அல்ல என்றும் அவர் கூறினார்.

மேலும், அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் அக்மால் சாலே மற்றும் பெர்லிஸ் முஃப்தி டாக்டர் அஸ்ரி ஜைனுல் அபிதீன் ஆகியோரின் மௌனத்தைக் கேள்வியெழுப்பிய அவர், அனைத்து மதங்களும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!