Latestமலேசியா

நஜிப்பின் இல்லத்தில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தொடரும் – கோலாலம்பூர் காவல்துறை

கோலாலம்பூர், செப்-28-Jalan Langgak Dutaவில் உள்ள முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வரும் 24 மணி நேரக் காவல் பாதுகாப்பு அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை தொடரும். கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் Datuk Fadil Marsus அத்தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

நஜிப்பிப் வீட்டுக் காவல் தொடர்பான தகவல் கிடைத்தது முதலே பாதுகாப்புப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் Sentul மாவட்டக் காவல் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறைப் பிரிவு தலைமையக அதிகாரிகள் அப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SRC International வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க நஜிப்புக்கு செப்டம்பர் 18ஆம் தேதி நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. அவ்வகையில் அவர் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த வேண்டும்.

2028 ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை அவர் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என கூட்டரசு பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, உதவி ஆணையர் Shaidatul Akmar Mohd Noor கோலாலம்பூர் புதிய சிறப்புப் பிரிவுத் தலைவராகவும், உதவி ஆணையர் Ahmad Azwan Amin Nordin டாங் வாங்கியின் புதிய OCPDயாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக Fadil கூறினார். மாறிவரும் பாதுகாப்புச் சூழலில் உளவுத் திறன், பகுப்பாய்வு மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மற்றொரு நிலவரத்தில், இன்று காலை IJN-ல் காலமான Tun Dr Siti Hasmah Mohd Ali-யின் மறைவுக்கு Fadil இரங்கல் தெரிவித்தார். அவரது குடும்பத்தினர் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள இறைவன் துணை புரிய வேண்டும் என்றும் அவர் பிரார்த்தித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!