
கோலாலம்பூர், செப்-28-நாட்டிலுள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் தங்களின் இன்றைய நிகழ்ச்சிகளை எளிமையாக, அமைதியான முறையில் மாற்றியமைத்து வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
மறைந்த Tun Dr Siti Hasmah Mohd Ali-க்கு மரியாதை செலுத்தும் வகையில் அவ்வாறு செய்ய கேட்டுக் கொள்ளப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்தார். அதே சமயம் அவரது கணவரும் முன்னாள் பிரதமருமான Tun Dr Mahathir Mohamadட்டுக்கும் குடும்பத்தினருக்கும் அரசாங்கத்தின் சார்பில் அவர் ஆழ்ந்த இரங்கலையும் கூறிக் கொண்டார்.
தனது 100 ஆவது வயதில் காலமான Tun Dr Siti Hasmah நாட்டிற்கு பெரும் பங்காற்றியதுடன், மக்களுடன் நெருக்கமானவராகவும் விளங்கினார். அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றைய ஒளிபரப்புகள் சூழலுக்கு ஏற்ப அமைதியான முறையில் இருக்க வேண்டும் என Fahmi கேட்டுக் கொண்டார்.
மருத்துவம் மற்றும் சமூக நலத்துறைகளில் Tun Dr Siti Hasmah ஆற்றிய பங்களிப்பு நினைவுகூரத்தக்கவை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவரது மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும் என்றார்.



