Latestமலேசியா

உலகளவில் 2ஆம் இடத்திற்கு முன்னேறிய மலேசியக் கடப்பிதழ்

புத்ராஜெயா, செப்டம்பர் 28 – 2026ஆம் ஆண்டுக்கான Passport Index Global Ranking தரவரிசையில், மலேசியக் கடப்பிதழ் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த கடப்பிதழாக முன்னேறியுள்ளது.

மலேசியக் குடிநுழைவுத் துறை வெளியிட்ட தகவலின்படி, மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் மொத்தம் 175 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு செல்ல முடியும். இதில் 129 இடங்களுக்கு விசா தேவையில்லை. மேலும் 46 இடங்களில் சென்றடைந்ததும் விசா பெறலாம். 23 இடங்களுக்குச் செல்ல முன்கூட்டியே விசா பெற வேண்டும்.

கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த மலேசியக் கடப்பிதழ், இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தரவரிசையில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்திலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஸ்பெயின் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!