Latestமலேசியா

சுபாங் ஜெயாவில் பேருந்து விபத்து; வெளிநாட்டு மாணவர் பலி

சுபாங் ஜெயா, செப்டம்பர் 28 – சுபாங் ஜெயாவில் இன்று காலை Rapid KL பேருந்து பல வாகனங்கள் மீது மோதிய விபத்தில், 19 வயதான வெளிநாட்டு மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

T776 வழித்தடத்தில் சென்ற பேருந்து, காலை 6.19 மணியளவில் பெர்சியாரான் சுபாங் பெர்மாய் (Persiaran Subang Permai) பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. முதலில் சிவப்பு விளக்கில் நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், பின்னர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட மேலும் இரண்டு வாகனங்களிலும் மோதியது.

மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் 19 வயதுடைய தனியார் பல்கலைக்கழக மாணவர்கள். இந்நிலையில் அம்மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதே நேரத்தில் பின்னால் அமர்ந்திருந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்தை 29 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஓட்டியதாகவும், அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. Rapid KL, விசாரணைக்கு அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!