Latestமலேசியா

‘Entah binti Ta’tahu’ – வித்தியாசமான பெயரால் இணையத்தில் வைரலாகியுள்ள மூதாட்டி

பகாங், ஆகஸ்ட் 13 – பகாங், குவாலா கிராவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் தனித்துவமான பெயர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அவரது பெயர் (என்தா பிந்தி தாத்தாஹு) ‘Entah binti Ta’tahu’எனும் நிலையில், குவாலா கிராவ் அம்னோ தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் முகமட் சயீட்டுடன் உரையாடியபோது தனது அடையாள அட்டையையும் காண்பித்தார்.

இந்த காணொளியை இஸ்மாயில் தனது TikTok கணக்கில் பகிர்ந்துள்ளார். “மலேசியாவில் இதுபோன்ற பெயர் கொண்ட ஒரே நபர் இவர்தான்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, சமூக வலைதளப் பயனர்கள் தங்களது தாத்தா, பாட்டிகளுக்கும் வித்தியாசமான பெயர்கள் இருந்ததாகக் கூறி பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!