Latestமலேசியா

சிப்பாங் எஃப்1 போட்டியை மீண்டும் நடத்தலாம் – துன் மகாதீர்

சிப்பாங், ஆகஸ்ட் 13 – மலேசியா மீண்டும் சிப்பாங் சர்வதேச சுற்றுவட்டத்தில் ஃபார்முலா 1 (F1) போட்டியை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு அதிகரித்த ஏற்பாட்டுச் செலவு காரணமாக F1 போட்டியை மலேசியா கைவிட்ட நிலையில், தற்போது நாணய மதிப்பில் ஏற்பட்ட மாற்றத்தால் செலவை சமாளிக்க முடியும் என அவர் கூறினார்.

அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை செப்பாங்கில் நடைபெறவுள்ள பஹ்ரைன் கிராண்ட் பிரிக்சை (Bahrain Grand Prix) அடிப்படையாகக் கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார மற்றும் சுற்றுலா வருமானத்தை மதிப்பிட்டு, மலேசிய கிராண்ட் பிரிக்சை, (Malaysian Grand Prix) நிரந்தரமாக மீண்டும் நடத்துவது குறித்து முடிவு செய்யலாம் என்றார்.

F1 போட்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன், ஹோட்டல், உணவகம், சில்லறை விற்பனை மற்றும் விமானத் துறைகளுக்கும் பலன் அளிக்கும் என்றும் துன் மகாதீர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!