
ஷா ஆலம், ஆகஸ்ட் 13 – பண்டார் உத்தாமாவிலுள்ள பள்ளியில் 16 வயது மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவன், தற்காப்பு வாதம் முன்வைக்க வேண்டும் என ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி, அரசுத் தரப்பு குற்றச்சாட்டிற்கு ஆரம்பகட்ட ஆதாரங்களை வெற்றிகரமாக நிரூபித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி காலை, பள்ளியின் மாணவிகள் கழிப்பறையில், மாணவி பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.
இந்த வழக்கில் 11 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று சிறார்கள், ஆசிரியர், உயிரிழந்த மாணவியின் தாய், நோயியல் நிபுணர் மற்றும் விசாரணை அதிகாரியும் உள்ளடங்குவர்.
வழக்கில் சுமார் 100 தடயப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. குற்றம் நடந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் சிறாராக இருந்ததால், அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது



