
மலாக்கா, பிப்ரவரி- 20 – மலாக்காவில் JPJ அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில், 5 டன் லாரியிலிருந்து ஓட்டுநர் எகிறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாமான் குருபோங் ஜயாவில் நேற்று மாலை 4 .30 மணியளவில் அச்சம்பம் நிகழ்ந்தது.
Lebuh Sungai Udang–Paya Rumput–Ayer Keroh சாலையில் அந்த லாரியைக் கண்ட JPJ அமுலாக்க அதிகாரிகள், சோதனைக்காக அதனை நிறுத்தக் கோரினர்.
எனினும், ஓட்டுநர் அதற்கு இணங்காததால், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 25 கிலோ மீட்டர் வரை JPJ துரத்திச் சென்றது.
ஒரு கட்டத்தில் ஓட்டுநர் லாரியிலிருந்து குதித்து விட்டார்; இதனால் ஓட்டுநர் இல்லாத லாரி அங்கிருந்த வீட்டொன்றை மோதியது.
அதில், வீட்டின் வேலி, சுவர் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Mitsubishi Triton பிக் அப் லாரி சேதமடைந்தன.
எனினும், எவரும் காயமடையவில்லை; அச்சம்பவம் விசாரணைக்காகப் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், 27 வயது லாரி ஓட்டுநர் உள்ளூர் மக்களின் உதவியுடன் பிடிபட்டார்.
லாரி ஓட்டுநருக்கு CDL உரிமம் இல்லாதது, GDL உரிமம் இல்லாதது, சாலை சமிக்ஞ்சை விளக்கை மீரியது, கவனக்குறைவாக வாகனமோட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 5 புதிய சம்மன்களும் வெளியிடப்பட்டன.
முன்னதாக, JPJ வாகனம் விரட்டிச் செல்ல, லாரி ஒன்று சாலையின் எதிர்திசையில் தப்பியோடும் காட்சிகள் அடங்கிய 42 வினாடி வீடியோ வைரலாகியது.