கோலாலம்பூர், ஜனவரி-2 – புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டத்தின் போது தலைநகர் KLCC வளாகத்தில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டமும் வாணவேடிக்கைகளும் வலைத்தளவாசிகளை மலைக்க வைத்துள்ளன.
டிக் டோக்கில் @rismand_ என்ற பயனர் பகிர்ந்துள்ள வீடியோ உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.
தனது ஹோட்டல் அறையிலிருந்து அவர் பதிவுச் செய்த காட்சிகளில், KLCC-யின் வண்ணமயக் கோலமும், மக்கள் கூட்டமும் பிரமாண்டமாகத் தெரிகிறது.
புத்தாண்டு பிறக்கும் போது வாணவேடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற இடங்களில் KLCC முக்கியமானதென்பதால், அங்கு வழக்கமாகக் கூட்டம் கூடுவது இயல்பு தான்.
ஆனால் இவ்வாண்டு வரலாறுக் காணாத கூட்டத்தால் அப்பகுதியே நிரம்பி வழிகிறது.
அவ்வீடியோ இதுவரை 1.4 மில்லியன் views-களைப் பெற்றுள்ளதோடு, 128,900 likes-களையும் அள்ளியிருக்கிறது.
வீடியோவைப் பார்த்த பலர் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாலும், ஒரு சிலர் சில வினாடி வாணவேடிக்கைகளுக்காக இப்படியொரு கூட்ட நெரிசல் தேவையா எனக் கேட்கின்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி மிதிபட வாய்ப்பிருப்பதாகக் கூறி ஒருவர் பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பினார்.