
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-கோலாலாம்பூரின் அடையாளமாக விளங்கும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தின் அடிவாரத்தில் _‘photo stalkers’_ என்றழைக்கப்படும் சட்டவிரோத புகைப்படக் கும்பல்களுக்கு எதிராக, கோலாலாம்பூர் மாநகர மன்றமான DBKL தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவ்வகையில், நேற்று அங்கு அனுமதியில்லாமல் புகைப்பட சேவைகள் வழங்கிய 2 வெளிநாட்டவர்கள் உட்பட 3 நபர்களிடமிருந்து கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புகைப்படம் எடுத்துத் தருகிறோம் எனக் கூறி சுற்றுப் பயணிகளை தொந்தரவு செய்வது மற்றும் சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“சுற்றுலா தலங்களில் சட்டவிரோத செயல்களுக்கு இடமில்லை”
எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைதாகி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என DBKL அதிகாரிகள் எச்சரித்தனர்.
முன்னதாக, அனுமதியில்லாத புகைப்படக்காரர்கள் KLCC-சியில் சுற்றுப் பயணிகளை ஏமாற்றி அதிக கட்டணம் வசூலிப்பதாக பரவலாக புகார்கள் எழுந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, DBKL கண்காணிப்பு மற்றும் அமுலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தப்பட்டு, கடந்த திங்கட்கிழமை 25 பேரும், மார்ச் 22-ஆம் தேதி 18 பேரும் கைதுச் செய்யப்படது குறிப்பிடத்தக்கது.



