
ஜோகூர் பாரு, செப் -23,
ஜோகூர் எல்லை வாயிலில் நேற்று MyNIISe செயலி வழியாக QR குறியீடுகளைப் பயன்படுத்தி தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறை (NIISe) செயல்படுத்தப்படுவது நெரிசலைக் குறைத்து, ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையின் பயனர்களுக்கு மிகவும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என்று ஜோகூர் நம்பிக்கை கொண்டுள்ளது. குடிநுழைவு முறையை நவீனமயமாக்குவதில் ஜோகூர் ஒரு முன்னோடி மாநிலமாகத் தொடர்கிறது. MyNIISe செயலியை பதிவிறக்கம் செய்து இந்த வசதியை முயற்சிக்குமாறு பொதுமக்களை மாநிலத்தின் பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு குழுவுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமட் பஸ்லி முகமட் சாலே ( Mohamad Fazli mohamad Salleh ) தெரிவித்தார்.
பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் இந்த முறையின் சோதனைச் செயலாக்கம் சுமூகமாக நடந்தது. சுல்தான் இஸ்கந்தர் வளாகத்தில் எட்டு நுழைவுப் பாதைகள் மற்றும் எட்டு வெளியேறும் பாதைகளை உள்ளடக்கிய 16 பாதைகள் உட்பட மொத்தம் 28 பாதைகள் சோதனைக்காக ஒதுக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆறு நுழைவுப் பாதைகள் மற்றும் ஆறு வெளியேறும் பாதைகளைக் கொண்ட சுல்தான் அபு பக்கர் வளாகத்தில் (KSAB) 12 பாதைகள் அடங்கும். பதிவு சிக்கல்கள் தொடர்பாக சிங்டெல் நெட்வொர்க் பயனர்களிடமிருந்தும் புகார்கள் வந்துள்ளன, மேலும் இந்த விவகாரம் NIISe மற்றும் HeiTech Padu வுடன் விசாரிக்கப்படுகிறது