Latestமலேசியா

MyBorderPass நிறுத்தப்படும் என்ற வதந்தி; குடிநுழைவுத் துறை மறுப்பு

புத்ராஜெயா, மார்ச்-6-MyBorderPass மார்ச் 1, முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், MyNIISe மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் பொய்யானவை.

குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

உண்மையில் MyBorderPass இன்னும் செயல்பாட்டிலேயே உள்ளது, மேலும் அது MyNIISe முறையுடன் விரைவில் ஒருங்கிணைக்கப்படும்.

எனவே, பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாமென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதுவாயினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புங்கள் என்றும் குடிநுழைவுத் துறை கூறிற்று.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!