Latestமலேசியா

சரவாக்கில் சிமெண்ட் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து ஓட்டுநர் பலி

சரவாக், நவம்பர் 2 – சரவாக், ஸ்ரீ அமான் ஜாலான் பந்துவில் சிமெண்ட் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதன் 56 வயது ஓட்டுநர் உயிரிழந்தார்.

இன்று நண்பகல் 12.38 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஸ்ரீ அமான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
எனினும், தீயணைப்பு வாகனம் விபத்து நடந்த பகுதிக்குச் செல்ல முடியாததால், தோட்ட நிர்வாகத்தின் நான்கு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தி சுமார் 74 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தைச் சென்றடைந்தனர்.

லாரிக்குள் சிக்கி, சுயநினைவின்றிக் கிடந்த ஓட்டுநரை மீட்க இரண்டு அகழ்வுப் பொறிகள் (Excavators) உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாலை 4 மணியளவில் மீட்கப்பட்ட அவரை, சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்.
பின்னர், அவரது உடல் மேல்நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்புப் பணி மாலை 4.20 மணிக்கு நிறைவடைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!