Latestமலேசியா

இரண்டாம் படிவ மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வெல்டருக்கு 6 ஆண்டுகள் சிறை, 2 பிரம்படிகள்

மூவார், நவ-02-ஜோகூர், Tangkakக்கில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் இரண்டாம் படிவ மாணவி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 34 வயது வெல்டர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. மூவார் sessions நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.

குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின், Herwan Abdul Rani எனும் அவ்வாடவர் தம் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகளுடன், ஓராண்டு காலம் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நள்ளிரவுக்கும் அதிகாலை 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், Tangkak, Taman Kesang Bayu அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அக்குற்றம் நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. அக்குற்றம் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது.

அறிமுகமான ஒருவரால் தமது மகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக அம்மாணவியின் தாயார் முன்னதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். முதற்கட்ட விசாரணையில், மாணவிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் சுமார் ஒரு மாத காலமாக அறிமுகம் இருந்தது தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!