Latestமலேசியா

ஜெராண்டுட் பள்ளி மாணவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு: முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தல்

பகாங் மாநிலம் ஜெராண்டுட்டில், தொடக்கப்பள்ளி மாணவர் ஒருவரிடம் பாலியல் தன்மை கொண்ட தவறான நடத்தையில் அப்பள்ளியின் ஆசிரியர் ஈடுபட்டதாக கூறப்படும் புகாரை முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மாணவரின் தந்தை அளித்த போலீஸ் புகாரில், பள்ளி வளாகத்தில் தனது மகனிடம் முறையற்ற வகையில் ஆசிரியர் ஒருவர் நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளதாக தமிழர் குரல் அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

புக்கிட் அமானும் கல்வி அமைச்சும் விசாரணையை தீவிரப்படுத்தி, விசாரணைக்கு உட்பட்ட நபர் மாணவர்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், வேறு மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என விசாரிக்கவும், புகார் அளித்த குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாத்து உளவியல் ஆதரவு வழங்கவும் வலியுறுத்தினார்.

விசாரணை முடியும் வரை யாரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்பதை ஏற்கும் அதே வேளையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் தாமதிக்கப்படக் கூடாது என்றும் டேவிட் மார்ஷல் கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர்–மாணவர் தொடர்பைக் கண்காணிக்கும் நடைமுறைகள், புகார் அளிக்கும் வழிகள், தவறான நடத்தை குறித்த புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கல்வி அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அறிக்கையில் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!