
சிப்பாங், டிசம்பர் 4 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1-ல் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட போலி குண்டு மிரட்டல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர், தனது பையை நண்பர்கள் தொடாமல் இருக்கவே அந்த மிரட்டல் குறிப்பை எழுதியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் 3 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பின்னர் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று KLIA மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Azman Sharia கூறியுள்ளார்.
எவ்வித குற்ற நோக்கத்தின் அடிப்படையிலும் தான் அவ்வாறு எழுதவில்லையென்றும், தனது பையை நண்பர் தொடாமல் இருப்பதற்காகத்தான் அவ்வாறு செய்ததாகவும் அந்த ஆடவர் மேலும் கூறினார்.
முன்னதாக, KLIA டெர்மினல் 1-ல் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர பரிசோதனையை மேற்கொண்டனர். அது போலி தகவல் என உறுதி செய்யப்பட்ட பின்னர் போலீசார் சந்தேக நபரை உடனடியாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



