Latestமலேசியா

KLIA 2-வில் அநாகரீகச் செயல்; சீன நாட்டு தம்பதிக்கு தலா 5,000 ரிங்கிட் அபராதம்

செப்பாங், பிப்ரவரி-17 – KLIA 2 விமான முனையத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டு சலசலப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக, சீன நாட்டு தம்பதிக்கு தலா 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செப்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 27 வயதான Xu Jian Feng மற்றும் அவரின் 28 வயது மனைவி Shi Qian இருவரும் ஒப்புக் கொண்டதால், நீதிபதி அத்தண்டனையை விதித்தார்.

அபராதம் செலுத்தத் தவறினால் இருவரும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

KLIA 2 முனையத்தின் Gate Q5 பாதையில், பொது இடத்தில் தங்கள் ஆடைகளை கழற்றுவது போன்ற அநாகரீகமான செயல்களைச் செய்து அத்தம்பதி பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

அச்சீனப் பிரஜைகள் முன்னதாக பிப்ரவரி 9 ஆம் தேதி KLIA 2 முனையத்திலிருந்து சீனாவின் Jieyan Chaosan புறப்பட்ட விமானத்தில் இடையூறு விளைவித்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

எனினும், அத்தம்பதிக்கு மனநலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதால், பிப்ரவரி 13-ஆம் தேதி போலீஸ் அவர்களைக் கைதுச் செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!