Latestமலேசியா

KUSKOP கடனுதவிகள் மூலம் 12,645 இந்தியத் தொழில்முனைவோர் பயன் – ரமணன் தகவல்

கோலாலம்பூர், நவம்பர் 18-தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP வாயிலாக, பல்வேறு கடனுதவித் திட்டங்களின் கீழ் 2024 முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை மொத்தம் 12,645 இந்தியத் தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர்.

அவர்கள் பெற்ற மொத்தக் கடனுதவி RM249.8 மில்லியன் என, துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த கடனுதவிகள் SPUMI, PENN, BRIEF-i, மற்றும் SME Bank வழங்கும் Vanigham Financing திட்டங்கள் வழியாக வழங்கப்பட்டதாக, மக்களவையில் சுங்கை சிப்புட் உறுப்பினர் எஸ். கேசவன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் சொன்னார்.

TEKUN Nasional கடன்களுக்கான விண்ணப்பங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்; அடையாள அட்டை நகல், நிறுவனப் பதிவு பத்திர நகல், வளாகத்தின் 3 புகைப்படங்கள், 3 மாத வங்கிக் கணக்குக் அறிக்கைகள் போன்ற அடிப்படை ஆவணங்கள் மட்டுமே தற்போது தேவையாகின்றன.

தவிர, அனுமதி கிடைக்கும் காலமும் 21 நாட்களிலிருந்து 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த முயற்சி தேசியத் தொழில் முனைவோர் கொள்கை 2030 மற்றும் மலேசியா மடானி நோக்கத்துடன் இணைந்து, இந்தியச் சமூகத்தையும், குறிப்பாக பெண்கள் தொழில் முனைவோரையும் வலுப்படுத்துகிறது என ரமணன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!