Latestமலேசியா

Lal Par Saree Walk’ நிகழ்வில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள்; மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற முன்னெடுப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 8 –  Roots of Bengal மற்றும் Mokshya கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய சங்கம் இணைந்து நடத்திய ‘Lal Par Saree Walk’ நிகழ்வு டிசம்பர் 5 ஆம் தேதியன்று Bangunan NLFCS-ல் மிக சிறப்பாக நடைபெற்றது.

மலேசியா, மத்திய கிழக்கு, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய லால் பார் சேலை நிகழ்வில் பங்கு பெற்று தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

இந்த பெரும் திரளான பங்கேற்பு, “அதிகமான பெண்கள் ஒரே நிகழ்வில் லால் பார் சேலையை அணிந்திருந்தனர் என்ற அடிப்படையில், மலேசிய புத்தக சாதனைப் படிவத்திற்கு (MBOR) அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதர் HE BN. ரெட்டி மற்றும் NSCBICC இயக்குநர் திருமதி Vijayalakshmy கலந்து விழாவைத் தொடங்கிவைத்து பின்னர் வந்தே மாதரம் பாடலுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையை வெகுவாக பாராட்டினர்.

மேலும் இந்நிகழ்வில் Nazrul–Rabindra இசை, Baul பாடல், Dhunuchi நடனம், Alpona கலைக்காட்சி ஆகியவை இடம்பெற்று, பெங்காலி கலாச்சாரத்தின் செழுமையை மலேசியர்களுக்கு அழகாக எடுத்துக்காட்டின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!