
பெங்களூரு, மார்ச்-12,பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களில் வர்த்தக LPG எரிவாயு விநியோகம் திடீரென பாதிக்கப்பட்டதால், ஹோட்டல் மற்றும் உணவகத் துறை கடும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
சமையல் எரிவாயு கிடைக்காத நிலை ஏற்பட்டதால், பல ஹோட்டல் சமையலறைகள் தற்போது விறகடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கத் தொடங்கியுள்ளன.
சில இடங்களில் பணியாளர்கள் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து விறகுகளை சேகரித்து கொண்டு வந்து சமையலை நடத்தி சமாளித்து வருகின்றனர்.
தமிழகத்தின் சில சாலையோரக் கடைகளும் விறகடுப்புகளுக்கு மாறியிருக்கும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
இந்த LPG எரிவாயுவின் திடீர் பற்றாக்குறைக்கு, ஈரான்- இஸ்ரேல் மோதல்களால் உலகின் முக்கிய எரிசக்தி கடல் பாதையான Hormuz நீரிணை பாதிக்கப்பட்டு, இறக்குமதி தாமதமாகியுள்ளதே காரணமாகும்.
இதன் தாக்கம் இந்தியாவில் LPG விநியோகத்திலும் பெரிதும் பிரதிபலித்துள்ளது.
தமிழகத்தில் தங்குத் தடையின்றி LPG எரிவாயு தோம்புகளை விநியோகம் செய்ய 20 நாட்களுக்குத் தேவையாக கையிருப்பு உள்ளதாகவும், ஒரு தோம்பு வாங்கிய பிறகு 25 நாட்கள் கழித்தே அடுத்த தோம்பு வாங்க முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ன.
எனினும் ஒருவேளை விநியோகம் விரைவில் சீராகாவிட்டால், ஹோட்டல் மற்றும் உணவகத் துறைக்கு மேலும் சவால்கள் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது…



