
டுங்குன், பிப்ரவரி-17 – திரங்கானு புக்கிட் பெசி அருகே LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையில், புல் வெட்டும் தொழிலாளி ஒரு கையெறி குண்டை கண்டெடுத்தார்.
நேற்று மதியம் 12.50 மணியளவில் அக்குண்டு கண்டெடுக்கப்பட்டது.
உடனடியாக போலீஸ் அவசர எண்ணுக்கு அழைத்து அவர் தகவல் தெரிவித்ததாக, டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் மைசூரா அப்துல் காடிர் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீஸ், பாதுகாப்புக் கருதி நெடுஞ்சாலையின் 2 வழிப் பாதைகளையும் சுமார் 300 மீட்டருக்கு மூடியது.
வெடிகுண்டு ஒழிப்பு குழு வரவழைக்கப்பட்டு மாலை 4 மணியளவில் அந்த கையெறி குண்டு அழிக்கப்பட்டது.
அக்குண்டை அங்கு யார் வீசி சென்றார்கள் என்பது உள்ளிட்ட விஷயங்களைக் கண்டறிய போலீஸ் மேற்கொண்டு விசாரித்து வருகிறது.