Latestமலேசியா

LRT ரயிலில் பாலியல் தொல்லைக்கு இலக்கான பெண்; கையும் களவுமாகப் பிடிபட்ட 32 வயது ஆடவன்

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 26 – பெட்டாலிங் ஜெயா LRT ரயிலில், பெண் ஒருவரைத் பாலியல் தொல்லைக்கு ஈடுபடுத்திய, 32 வயது ஆடவனை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி, கூட்டம் மிகுதியாக இருந்த ரயில் பயணத்தில் யாரோ ஒருவர் பின்னால் தன்னை உரசிக் கொண்டிருந்ததை பாதிக்கப்பட்ட பெண் உணர்ந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அதைப் பற்றி பெரியதாக யோசிக்காத அப்பெண், தன் பின்னால் நின்றிருந்த ஆடவன் Mengkuang நிலையத்தில் வெளியேறிய நிலையில், பின்னர்தான் அதிர்ச்சிகரமான ஒன்றை உணர்ந்ததாக சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

அதாவது, அவர் அணிந்திருந்த பாவாடையில் வெள்ளை நிற திரவம் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்.

அப்போதுதான், தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதை உணர்ந்த அந்த பெண், தனக்கு ஏற்பட்ட இந்த கசப்பான நிகழ்வை சமூக ஊடகத்தில் பதிவிட்டு, போலிஸ் புகாரையும் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையில், இன்று காலையில், அந்த ஆடவனை போலிஸ் கைது செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!