கோலாலம்பூர், அக்டோபர்-1 – மலேசிய ஊழல் தடுப்பாணையம் MACC-யின் 57-ஆவது நிறைவாண்டை ஒட்டி, கோலாலம்பூர் ஜாலான் காசிப்பிள்ளை, ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் அண்மையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
MACC இந்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற அச்சிறப்பு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.
சபா மாநில MACC தலைவர் டத்தோ கருணாநிதி Y சுப்பையா தலைமையில் 25 இந்திய அதிகாரிகள், பூஜையில் கலந்து சிறப்பித்தனர்.
ஆலயத் தலைவர் மஹேஷ் தவா பிராத்தனைக்குத் தலைமைத் தாங்கினார்.
முக்கிய நிகழ்வாக, டத்தோ கருணாநிதி ‘இந்து மத பார்வையில் ஊழல்’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
சிறப்பு பூஜையோடு, வந்திருந்த பக்தர்கள் MACC அதிகாரிகளோடு நேரில் அளவளாவவும், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் அந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில், வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்தும் ஆலய நிர்வாகத்துடன் சிறப்பு சந்திப்பும் நடத்தப்பட்டது.