Manchester United-இன் இடைக்கால மேலாளராக Carrick நியமனம்

இங்கிலாந்து, ஜனவரி 14 – Manchester United காற்பந்து அணி, முன்னாள் காற்பந்து வீரர் Michael Carrick-ஐ, இந்த சீசன் முடிவுவரை இடைக்கால மேலாளராக நியமித்துள்ளது.
12 ஆண்டுகள் யுனைடெட் அணிக்காக விளையாடிய Carrick, அந்த காலகட்டத்தில் 12 முக்கிய கோப்பைகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அணியை மீண்டும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தகுதிக்கு கொண்டு செல்லும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்திற்கு பிறகு கருத்து தெரிவித்த Carrick, மேன்செஸ்டர் யுனைடெட் அணியை வழிநடத்துவது மிகப் பெரிய மரியாதை மற்றும் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு, மைக்கேல் கேரிக் மூன்று போட்டிகளில் தோல்வியின்றி மேன்செஸ்டர் யுனைடெட் அணியை வழிநடத்திய அனுபவம் பெற்றவர்.
தற்போது மேன்செஸ்டர் யுனைடெட் பிரீமியர் லீக்கில் 7-வது இடத்தில் உள்ளது என்றும் 4-வது இடத்தில் உள்ள லிவர்பூலுக்கு மூன்று புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளதால் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ruben Amorim நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கேரிக் இடைக்கால மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஞாயிற்றுக்கிழமை மேன்செஸ்டர் சிட்டிக்கு எதிரான போட்டி அவருக்கான மிகப்பெரிய முதல் சவால் என்பது குறிப்பிடத்தக்கது.



