
கோலாலம்பூர், மார்ச் 11-சினிமா திரையரங்குகளை நடத்திவந்த MBO சினிமாஸ் Sdn Bhd, நிறுவனம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்துறையில் மீண்டும் நுழைந்து அதன் நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ததையும் , அவர்களின் சினிமா அனுபவத்தின் ஒரு பகுதியாக இருந்ததையும் ஒரு பாக்கியமாகக் கருதுவதாக அந்த நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மனம் நிறைந்த காட்சிகளின் போது அமைதியான தருணங்களில் நிரம்பிய அரங்குகளில் இருந்த அனைத்து ஆரவாரங்களும் சிரிப்பும் எங்களுக்கு உலகத்தை மிகவும் அருகே கொண்டு வந்ததாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியது.
இருக்கைகளையும் இதயங்களையும் நிரப்பியதற்கு MBO சினிமா நிறுவனம் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டு MBO நிறுவனம் மலேசியாவில் அதன் கிளைகளை மூடியது. கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் MBO நிறுவனத்தின் சொத்துக்களை கையகப்படுத்திய பிறகு புதிய நிர்வாகத்தின் கீழ் அந்த நிறுவனம் மீண்டும் செயல்பட்டபோது சிலாங்கூர், மலாக்கா, பேராக் மற்றும் ஜோகூர் முழுவதும் எட்டு திரையரங்குகளை MBO சினிமாஸ் இயக்கி வந்தது.



