
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-7,
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, கிள்ளான், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் நடத்திய 19 மணி நேர “Ops Optik” சோதனையில், சுமார் 10,000 தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு 1 மில்லியன் ரிங்கிட்டாகும்.
SIRIM சான்றிதழ் இல்லாமல், தொழில்நுட்ப தர நிர்ணயத்தையும் பூர்த்திச் செய்யத் தவறியதால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
பயனீட்டாளர்களின் பாதுகாப்புக்கும், சேவைத் தடங்கலை தவிர்க்கவும் இந்நடவடிக்கை அவசியம் என MCMC கூறியது.
எனவே, SIRIM தரச் சான்றிதழ் பெற்ற சாதனங்களை மட்டுமே வாங்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



