பேங்கோக், செப்டம்பர் -21 – தாய்லாந்தில் பிறந்துள்ள குட்டையான அரிய வகை pygmy நீர்யானைக் குட்டி Moo Deng, உலகம் முழுவதும் படு பிரபலமாகியிருக்கிறது.
ஏற்கனவே தனது சுட்டித்தனத்தாலும் சேஷ்டைகளாலும் நெட்டிசன்களின் மனதை கொள்ளை கொண்ட Moo Deng, தற்போது memes-களிலும் வலம் வரத் தொடங்கியுள்ளது.
அதுவும் ஹோலீவூட் படங்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களுடன் Moo Deng-கின் படத்தை இணைத்து நெட்டிசன்கள் memes-களை உருவாக்கி அசத்தி வருகின்றனர்.
Godzilla, ET, Spiderman, House of the dragon போன்ற படங்களின் போஸ்டர்கள் மற்றும் பிரபலமான காட்சிகளுடன் Moo Deng-கின் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது சரிப்பை வரவழைக்கிறது.
Jurassic World பட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ X தளத்தில் கூட, dinosaurs-களுடன் Moo Deng இருப்பது போன்ற memes பதிவேற்றப்பட்டுள்ளது.
Memes-கள் மட்டுமின்றி, கார்டூன்கள், விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றிலும் Moo Deng-கின் தாக்கம் பட்டையைக் கிளப்பி வருகிறது.
Moo Deng-கிற்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளதால், அதன் கூண்டில் கேமராக்களைப் பொருத்தியுள்ள மிருகக்காட்சி சாலை நிர்வாகம், வரும் வாரங்களில் அதன் சேஷ்டைகளை 24 மணி நேரமும் நேரலை செய்யத் திட்டமிட்டுள்ளது.